சிவபுராணம்

சிவபுராணம்

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!...

  சிவபுராணம்.pdf


நடராஜ பத்து

நடராஜ பத்து

மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீ
மறைநான்கின் அடிமுடியும்நீ...

  நடராஜ பத்து.pdf


காலபைரவாஷ்டகம்

ஸ்ரீ காலபைரவாஷ்டகம்

தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்
வ்யாள யஜ்ஞஸூத்ர மிந்துசேகரம் க்ருபாகரம் !...

  ஸ்ரீ காலபைரவாஷ்டகம்.pdf


சுவர்ண பைரவர் அஷ்டகம்

சுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம்

தனந்தரும்வயிரவன்தளிரடிபணிந்திடின்
தளர்வுகள்தீர்ந்துவிடும்...

  சுவர்ண பைரவர் அஷ்டகம்.pdf


மார்க்கபந்து ஸ்தோத்திரம்

ஸ்ரீ மார்க்கபந்து ஸ்தோத்திரம்

தனந்தரும்வயிரவன்தளிரடிபணிந்திடின்
தளர்வுகள்தீர்ந்துவிடும்...

  மார்க்கபந்து ஸ்தோத்திரம்.pdf


ஓம்நமோ நமசிவாய

ஓம்நமோ நமசிவாய

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ...

  ஓம்நமோ நமசிவாய.pdf


திருஆலவாய்ப் பதிகம்

திருஆலவாய்ப் பதிகம்

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு...

  திருஆலவாய்ப் பதிகம்.pdf


நமச்சிவாயப் பதிகம்

நமச்சிவாயப் பதிகம்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்...

  நமச்சிவாயப் பதிகம் .pdf


அருள்மிகு அப்பர் சுவாமி

அருள்மிகு அப்பர் சுவாமி

நிழற்படம் பதிவிறக்க

  அருள்மிகு அப்பர் சுவாமி.jpg


 

திருக்கோயிலில்  மாதம் தோரும் நடைபெரும் பூஜைகள்!

 

வைகாசி மாதம்

வைகாசி என்றாலே விசாகம் என்றுதான் நினைவிற்கு வரும் ஆம் இங்கு இருக்கின்ற ஜெய சுப்ரமணியசுவாமிக்கு நிறைவான அலங்காரம் புஜைகள் நடைபெருகின்றது.

மாதம் தோரும் வருகின்ற இரண்டு ப்ரதோஷ்ங்களும் இங்கு வெகு சிறப்பாக நடைபெருகின்றது.

ஆனி மாதம்

அருள் மிகு அப்பர் சுவாமிகளின் "குருபுஜை" ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. 1951 ஆண்டு ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில் நூற்றாண்டு குரு புஜை கொண்டாடப்பட்டு, ஆண்டு தோரும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

அன்றைய தினம் இன்னும் அப்பர் சுவாமிகளின் வம்சாவழியினர் திருக்கோயில் வந்து குருபுஜையில் கல்ந்து கொள்வது மேலும் சிறப்பு.

ஆடி மாதம்

ஆடி மாதம் என்றாலே அம்பிகை அருள் ஒங்கி எங்கும் மங்கலம் நிறைந்து காண்போம், அதே போல் இந்த மாதத்தில் வெள்ளிக் கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பாளுக்கு சிறப்பான அலங்காரம் அபிஷேகம் போன்றவை நன்றாக நடைபெறும்.

உன்னதமான விரதம் வரலட்சுமி விரதம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

ஆவணி மாதம்

இந்த மாதம்  மங்கல நிகழ்வுகள் தொடங்கும் மாதம், விநாயகர் சதுர்த்தி அஸ்தம் நட்சத்திரம் சதுர்த்தி திதியும் சேரும் நன் நாளில் வெகு சிறப்பாக விழா கோலம் கொண்டாடப்படுகிறது.

பிரதோஷ விழா காண கண்கள் கோடி வேன்டும் என்பது போல், நாள் தோரும் சிறப்பாக நடைபெறும்.

புரட்டாசி மாதம்

அம்பாளூக்கு ஒன்பது நாட்கள் நவராத்தரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். ஊஞ்சல் விழா வைபவமாக கொண்டாடப்படுகின்றது மற்றும் விழா மேடையில் 10 நாட்கள் இசை இலக்கிய, நாட்டிய விழா, கலை நிகழ்ச்சிகள் நடத்தபட்டு கலைஞர்களுக்கு சான்றிதழ்களும் வழங்க படுகின்றது.

புரட்டாசி மாதம் பெளர்ணமி  தினத்தில் நிறை மணி உற்சவம் பழங்கள், காய் கனி கொண்டு நிறைவாக திருக்கோயில் முழுவதும் கட்டப்படும், அதை பார்ப்பதற்கு மிகவும் பரவசமாக இருக்கும்.

anna abhishekam

ஐப்பசி மாதம்

திபாவளி திருநாள் கேதாரி கெளரி விரதம் கால காலமாக இங்கு உள்ள மக்கள் திருக்கோயில் வந்து நோம்பு எடுப்பது வழக்கமாக வைத்து உள்ளனர். ஐப்பசி மாத பெளர்னமி இத்திருக்கோயிலில் நான்கு கால சிறப்பு நித்தியபடி புஜைகள் நடை பெற்று அன்னாபிஷேகம் நடை பெருகின்றது. வருடத்தில் இந்த நாளில் மட்டுமே அன்னத்தால் அபிஷேகம் செய்யபடுகின்றது.

அன்றைய தினம் மாலை நேரத்தில் சுத்த அன்னத்தால் சுவாமிக்கு அலங்காரம்   நடைபெறும் இந்த அன்ன அலங்காரம் அன்னாபிஷேகம் என்று கூறப்படுகின்றது. வருடத்தில் ஒரு நாள் மட்டுமே இந்த அலங்கார தரிசனம் காணக்கிடைக்கும். அந்த நேரத்தில் சுவாமி எண்ணற்ற அருளை தருகின்றார். வரும் ஐப்பசி அன்னபிஷேகத்தை மறவாமல் தரிசனம் செய்யவேண்டும் என்று இன்றே கங்கல்பம் செய்து கொள்வோம்.

கார்த்திகை மாதம்

சிவ பெருமானுக்கு உகந்த இந்த மாதத்தில் வருகின்ற திங்கள் கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு ஒவ்வொரு திங்கள் கிழமைகளிலும் 108 சங்காபிஷேகம் நடைபெரும் 4 வது திங்கள் கிழமை 1008 சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெருகின்றது. சங்கு என்பது தெய்விக குணம் உடையது மனித வாழ்க்கையில் எல்லா நேரங்களில் இது பங்களிக்கின்றது நாம் தரிசிக்க வேண்டிய வற்றில் இதுவும் ஒன்று.

திப தரிசனம், ஜோதியாக உள்ள சிவ பெருமானே, அவர் திப ஜோதியாக தரிசனம் தருகின்ற தினம் இந்த "திருக்கார்த்திகை தீபம்". சொக்கப்பானை காண வேன்டிய ஒன்றாகும்.

மார்கழி மாதம்

மாதத்திலே சிறந்தது இந்த மார்கழி, சைவம்-வைஷ்னம் என்று இருவேருமே சேர்ந்து கொண்டாடும் மாதம் இந்த மார்கழி மாதம். அதிகாலையிலே திருக்கோயில் நடைகள் திறக்கபட்டு காலை 5.30 மணிக்கு எல்லாம் திபாரதனைகளும்  வெகு  சிறப்பாக நடை பெருகின்றன  இந்த மாதம் முழுவதும்  நன்மை நிறைந்த மாதம் என்றே கூற வேண்டும் மற்றும் ஆடியபாதம் நின்றாடிய பாதம் என்று நடராஜ சுவாமி திருவாதிரை நன்னாளிலே இரவு வெகு சிறப்பான அபிஷேகம்  நடைபெறும்.  ஆருத்ரா தரிசனம் காண அவன் அருள் வேண்டும் என்றே கூற வேண்டும்.

வருடத்தில் ஒரு நாள் மட்டும் வீதி புறப்பாடு செய்யப்படும்.  இந்த நடராஜ மூர்த்தியை காண கண்கள் கோடி வேண்டும் என்றே கூறலாம்.

தைமாதம்

தைமாதம் நன்மை அனைத்தும் கொடுக்க  வல்ல  சூரியனை வணங்க உகந்தது. 

தை  வீசாகம்  தாயுமானவர்  நட்சத்திரம் என்பதால்,  குழந்தை செல்வம்  பெற்றிட  தை  விசாகத்தில்  தாயுமானவரை  தரிசனம் செய்தால்  குறைவில்லா  குழந்தை செல்வத்தை பெற்றிடலாம்.  தை கிருத்திகை சிறப்பு பெற்ற விழா வாகும்.

மாசி மாதம்

இந்த மாதத்தில் வரும் மகா சிவராத்திரி சொல்லில் அடங்க வண்ணம் சிறப்பு வாய்ந்தது. சிவ பெருமானுக்கு என்னற்ற விரதங்கள் இருந்தாலும் இந்த சிவ ராத்திரி விரதமே மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ஒவ்வொரு மாதம் அமாவசைக்கு முன் தினம் அதாவது சதுர்தசி தினத்தன்று வரும் சிவராத்திரி மாத சிவராத்திரி ஆகும். மாசி மாதம் சதுர்த்தி தீதியும் திருவோனம் நட்சத்திரமும் சேரும் நாள் மகா சிவராத்திரி விழா ஆகும்.  அன்றைய தினம் இரவு முழுவதும் நான்கு கால் அபிஷேகம் வெகு சிறப்பாக நடை பெருகின்றது.

வாய்ப்பு கிடைக்கும் போது பயன் படுத்த தெரிய வேண்டும், அதே போல் இவ்வாறு சிறப்பு மிக்க நாட்கள் வரும் தினங்களில் இறைவனை தரிசனம் செய்தால் நன்மைகள் பல பெற்றிடலாம்.

ஊர் கூடினால் தேர் இழுக்கலாம் அதே போல்,  எல்லா மக்களும் வணங்கும் வேளையில்  நாமும் வணங்கினால்,  இறை அருள்   மழைப் போல் பெற்றிடலாம்.

பங்குனி மாதம்

வருடம் முழுவதும் கிடைக்காத பலன்கூட இந்த பங்குனி மாதத்தில் கிடைத்திடும்,  மற்ற திருகோயில்களில் பத்து தினங்கள் உற்சவங்கள் நடை பெற்று திருக்கல்யாண விழா நடைபெரும்.  இந்த மாதம் கடைசி பிரதோஷம் தரிசனம் செய்தால் இந்த ஆண்டு முழுவதும் செய்த பலன் கிடைத்திடும்.

நாம் அழைத்தால் இறைவன் வருவார் நாம் தான் யோசிகின்றோம் இனி வேண்டாம் யோசனை,  சரணம் என்றே அடைந்துடுவோம்.  நம்  சந்ததிகள்  வலம் பெற்று  வாழ வழி வகுப்போம்.

அருள் மிகு அப்பர் சுவாமிகள் திருக்கோயில் வாருங்கள்
இறை அருள் பெற்றிடுங்கள், இன்பம் நிறைந்து வாழவே! வழிபாட்டிற்கு  செல்லும்விதம்

குளித்து, "சிவாய நம" என்று தீருநீறு அணிந்து உங்களாள் முடித்த அர்ச்சனைப்பொருள்களையும், தூபதீபத்திற்குரிய பொருள்களையும் எடுத்துக்கொண்டு கோயில்களுக்கு செல்லவேண்டும்.

மனம் வேறு எண்ணங்கள், வருத்தங்கள் ஆசைகள் இப்படி எதுவும் வந்து அடைந்து போகாமல் சுத்தமாக இருத்தல் வேண்டும்.

கோயில்களில் செய்ய கூடாதவைகள்:

  • கோயில்களுக்கு நீராடாமல் செல்வதோ, நீராடிய பின் ஈர ஆடையுடன் செல்வதோ கூடாது.
  • மூலஸ்தானத்தில் மூர்த்திக்கு அபிசேகம் நைவேத்தியம் முதலியவை நடக்கும்போது சுவாமிதரிசனம் செய்தல் வலம் வருதல் முதலியன தவிர்த்தல் வேண்டும்
  • கோயிலில் கிழக்கிலும், வடக்கிலும் கால்களை நீட்டி நமஸ்காரம் செய்வது கூடாது
  • நடந்து கொண்டும், கிடந்து கொண்டும் விபூதிதரித்தல் கூடாது
  • புகைத்தல், தாம்பூலம் அணிந்து செல்லல், செருப்பிணிந்து போதல், அசுத்தம் செய்தல், சிரித்து விளையாடல், வீண்மொழிபேசுதல், தூங்குதல் கூடாது
  • அன்னியர் யாவரேயாயினும் கோயிலுக்குள் வணங்குதல் கூடாது

ஜிவ சமாதியில் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள்

  • மனதை முழுமையாக மகானின் சன்னதியில் செலுத்த வேண்டும்
  • நான் என்ற அகம்காரம் மனதில் இல்லாமல், அடியாா்களுக்கு தொண்டு செய்ய வேண்டும்

 

திருக்கோயிலில்  நித்திய பூஜைகள் நடைபெரும் நேரம்!

apparswamy nandi

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல்
பகல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல்
இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.

உள்ளுறையில் என்னாவி நைவேத்யம் ப்ராணன் ஓங்குமதி தூபதீபம் ஒருகாலமன்றிது சதாகால பூசையாய் ஒப்புவித்தேன் பராபரமே

- தாயுமானவர்

புகைப்படங்கள்

தகவல்கள் அறிய

அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்

திருமயிலை,  ராயப்பேட்டை நெடுஞ்சாலை,

சென்னை.

தொலைப்பேசி : +91 044 2499 6797