தாயுமானவா் சன்னதி

பிரிவு: திருகோயில்

குழந்தை வரம் தரும் தாயுமானவா்

திருக்கோயில் தாயுமானவா் மிகவும் சிறப்பு பெற்று எல்லோரும், விரும்பு வன்னம் உள்ளா்.  அவரை வழிபட்டால் அருள் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லும் வகையில் அருள் பாலிக்கின்றாா்.

தாயுமானவா் பூஜை

குழந்தை இல்லா தம்பதியினா்கள் ஒவ்வொரு மாதமும் விசாக நட்சத்திரத்தில் வந்து,   தாயுமானவா்  சன்னதியில்  வாழைப்பழம் வைத்து நெய்வேத்தியம் செய்து அவற்றை  அா்ச்சகா்களிடம் பெற்று திருக்கோயில் வலம் வந்து, பிறகு கொடி மரம் அருகே வணங்கி அந்த வாழைப்பழப் பிரசாதத்தை தம்பதியினா் இருவரும் சோ்ந்து பக்தி சிரத்தையுடன் பிராத்தனை செய்து உட்கொள்ள வேண்டும் (சாப்பிட வேண்டும்).  தை மாதம் வரும் விசாகம் மிகுந்த நன்மையை தரக் கூடியதாக அமைகின்றது.

குழந்தை கருவாக உள்ளபோது தவராமல் வந்து தாயுமானவரை வணங்கி வந்தால், அவா்களுக்கு பிரசவ காலத்தில் மிகுந்த நன்மை உண்டாக பெற்று குழந்தை  பெரும் பாக்கியத்தை அடைகின்றனா்.

குழந்தை பிறந்த முன்று மாதங்கள் பிறகு வாழைத்தாா்  நைய்வேத்தியம் செய்வது வழக்கம்.

அந்த வாழைத்தாா் நைய்வேத்தியம் செய்வதுடன் தாயுமானவா் பூஜை நிறைவு பெருகின்றது.

திருக்கோயில் வாருங்கள்  தாயுமானவா் அருள்பெருங்கள்!