திருகோயில்

திரு கோயில் ஒரு பாா்வை

ஸ்தல வரலாறு

தருமமிகு சென்னையில் புகழ் பெற்ற திருமயிலையில் இராயப்பேட்டை நெடுந்சாலையில், அமைய பெற்று உள்ளது  இத்திருக்கோயில்.

18 சித்தா்கள் வாிசையில் இல்லை என்றாலும், அருள்மிகு அப்பர் சுவாமி இன்றும் சித்து விளையாட்டுகளை நடத்திக்கொண்டு உள்ளாா் என்பதில் எந்த அய்யமும் இல்லை.


பிரகார அமைப்பு

அற்புதமான இடஅமைப்பு திருக்கோயில் உள்ளே சென்றதும் மனதிற்குள் ஒருவித அமைதி அந்த அமைதி எங்கியிருந்து வருகின்றது என்று தொியா வண்ணம் இணம் புாியா ஒரு ஈற்பு நமக்குள்ளே தோன்றுகின்றது.
 
மிகவும் விசாலமான பிரகாரங்கள், மரங்கள் செடிகள் என்று இயற்கை சூழல் சுற்றிலும் நம்மை மனம் நெகிழவைக்கின்றது. திருக் கோயில் ஸ்தல விருச்சம் என்று தனியாக இல்லை, இருப்பினும் எல்லாவிதமான மரங்களும் இங்கு காணப்படுகின்றது.

அரசமர விநாயகா், வலம்புாி விநாயகா் எத்தனை தடைகள் இருந்தாலும் இந்த அரசமர விநாயகரை வணங்கி வந்தால் எல்லா விதமான தடைகளும் விளகப்பெற்று நன்மை ஏற்படும்.

ஏறத்தாழ 1990 ஆம் அண்டு இந்த வலம்புரி விநாயகர் ப்ரதிஷ்டை செய்யப்பட்டது அன்று முதல் திருக்கோயிலில் மிக பெரிய மாற்றங்களை இன்று வரை அடைந்து வருகின்றது.

ஜெய விநாயகர்

அடுத்த படியாக ஜெய விநாயகர் சன்னதி வடக்கு திசை நோக்கி பிரதான சன்னதியாக அமைய பெற்று உள்ளார். பெயரிலே ஜெயம் என்று கொண்டு உள்ளதால் நாம் ப்ரத்திக்கும் அனைத்து பிராத்தனைகளும் ஜெயம் அடைய செய்கின்றார்.

திருமணம் தாமதம் அடையும் ஆண், பெண் இந்த விநாயகரை வணங்கி வழிபட்டால் திருமண தடைகள் நீங்கி சிறப்பான திருமணம் நடை பெரும்.

கிழக்கு திசை நோக்கி மற்றும் ஒரு விநாயகர் அமைய பெற்று உள்ள சன்னதி நீதி விநாயகர் சன்னதி இங்கு ஒரு சிறப்பு என்னவென்றால் ஒரு சன்னதியில் மூன்று விநாயகர் அமைந்து இருப்பது, அவ்வாறு அமைந்து உள்ள சன்னதியில் நம்முடைய நியாயமான நீதிகளை வேண்டினால் நிச்சயமாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி கிடைக்கப் பெறுகின்றது என்பது சிறப்பான ஒன்று.

பிறகு கொடி மரம்,  பலிட்டம்,  நந்தி தேவர் மிகவும் அழகு மிகுந்து காணப்படுகின்றா். முலவர் சன்னதியில் அருள் மிகு அப்பர் சுவாமிகள் மிகவும் எழில் மிகுந்து காணப்படுகிறார் பெரிய லிங்கருபத்தில் இருக்கும்  மூலவர் எல்லா விதமான அனுகூலங்களையும் பத்தர்களுக்கு வழங்கி மனதில் நிங்கா இடம் பெற்று திகழ்கின்றார்.

சுவாமிகள் ப்ரகாரத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, விரபத்திரர், மஹாவிஷ்னு, ஆதி  மூலவர், பிரம்மா, தன்டிகேஸ்வரர், துர்க்கை அகிய பரிவார மூர்த்திகள் உள்ளன.

16 க்கால்  மண்டபம் அழகு மிகுந்தது, அதில் அக்னிமுலையில் நவக்கிரக சன்னதி அமையப்பெற்று இருப்பது ஒரு தனி சிறப்பு வாய்ந்தது.  இங்கு இருக்கும் கால பைரவர் நினைத்த காரியத்தை வெற்றி அடைய செய்கின்றார். செவ்வாய்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமித் திதி போன்ற காலங்களில் இங்கு இருக்கும் கால பைரவரை வழிபட்டு வந்தால் நன்மைகள் பல.

“தங்ககுடத்திற்கு பொட்டு வைத்தாற் போல்”

என்று கூறுவது வழக்கம், அது போன்றது கால பைரவர் சன்னதி அமையப்பெற்று  உள்ளது.  “குருபார்க்க கொடி நன்மை” என்பது போல் இங்கு குரு பார்த்த பைரவர் என்பர்.  குரு பைரவரை பார்ப்பதும்  பைரவர் குருவை பார்ப்பதும் மிகவும் ஒரு அற்புத காட்சி ஆகும்.  மற்றும் நால்வர் சன்னதி ஞானசம்பந்தர்,  திருநாவுக்கரசர்,  சுந்தரர்,  மாணிக்கவாசகர்  சேர்ந்து  இங்கு  சமய  குரவர்  நால்வர் தனி சன்னதி பெற்று இருப்பது ஒரு சிறப்பு.

குன்றத்துர் தெய்வ சேக்கிழார்  பெருமாளுக்கு இங்கு  மூலவர் எவ்வாறு உள்ளாரோ அதே போல் தனி சன்னதி அமையப்பெற்று உள்ளது   ஒரு  தனிச் சிறப்பு.

திருக்கோயில் வாருங்கள்   அப்பர் சுவாமி அருள்பெருங்கள்!

புகைப்படங்கள்

தகவல்கள் அறிய

அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்

திருமயிலை,  ராயப்பேட்டை நெடுஞ்சாலை,

சென்னை.

தொலைப்பேசி : +91 044 2499 6797