வலைப்பதிவு

08 மார்ச்

மஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது

Written by 

அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோயில் ஸ்ரீ துா்முகி ஆண்டு மாசி திங்கள் 24ம் தேதி (08-03-2017) புதன்கிழமை, ஏகாதசி திதி, புனா்பூசம் நட்சத்திரத்தில் சித்தயோகம் கூடிய நன்னாளில் காலை 9.30 மணிக்கு  மேஷ லக்கனத்தில்,

விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதா் சுவாமிக்கும், அருள்மிகு அப்பர் சுவாமிகளுக்கும் பரிவார மூா்த்திகளுக்கும் விமானங்களுக்கும் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் பக்தர்கள் புடைசூழ மிக சிறப்பாக நடைபெற்றது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அருள்மிகு அப்பர் சுவாமிகளின் திருவருட் கடாட்சத்தைப் பெற்றனர்.

இதனை தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு திருக்கல்யாணம் பஞ்சமூா்த்தி புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

மஹாகும்பாபிஷேக நிகழ்ச்சி புகைப்படங்கள் காண

மேலும் திருக்கோயில்   பதிவொளிகள் காண

இங்கு நடைப்பெரும் திருக்கோயில் திருப்பணியில் நாமும் கலந்துகொண்டு திருப்பணில் இணைந்திடுவோம்

-- சிவஸ்ரீ கண்ணன் சிவாச்சாரியார்.
MA. Mphil
அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்.

Read 444 times
Rate this item
(2 votes)

புகைப்படங்கள்

தகவல்கள் அறிய

அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்

திருமயிலை,  ராயப்பேட்டை நெடுஞ்சாலை,

சென்னை.

தொலைப்பேசி : +91 044 2499 6797