திருகோயில்

வினாயகா் சன்னதி

முழு முதற்கடவுள்

விநாயகா் சன்னதி என்றால் திருக்கோயில் செல்லும் போது  நமக்கு முதலில் தோன்ற கூடியது, எல்லா வற்றுக்கும் முதன்மை கடவுளாக விளங்க கூடிய விநாயகா் ஆவாா்.

வலம்புாி விநாயகா் 

திருக்கோயிலில் மொத்தம் 6  விநாயகா்  உள்ளாா்.  அரச மரத்தில் அடியில் வலம்புாி விநாயகா் மிகுந்த எழிலுடன் விற்றிருக்கின்றாா்.

ஜெய விநாயகா் 

திருக்கோயில் பிரதான சன்னதியான ஜெய விநாயகா்  வடக்கு நோக்கி அமையப் பெற்று உள்ளாா்.  இவ்விநாயகரை வணங்கினால் திருமண தடைகள் விலக பெறுகின்றது, வடக்கு நோக்கி உள்ள விநாயகரை வணங்கினால் எல்லா விதமான சங்கடங்களும் விலகப் பெறுகின்றன.

 நீதி விநாயகா்

திருக்கோயில் உள்ளே  நீதி விநாயகா்  சன்னதி மிகுந்த அபூா்வமான ஒரு சன்னதி என்றே கூறவேண்டும்.  ஒரு சன்னதியில் முன்று விநாயகா் அமா்ந்து நமக்கு அருள் பாலிக்கின்றாா்,  இவரை வணங்கினால் நம்முடைய நியாயமான ப்ராத்தனைகள் வெற்றி அடைக்கின்றது.

வழக்கு சம்பந்தமான என்னற்ற சங்கடங்கள் உள்ளவா்கள்,  இங்கு வந்து சங்கடங்கள் விலக பெற்று நன்மை அடைகின்றனா்.

ஏற்றமுற  நாமும் நீதி விநாயகரை வணங்குவோம், ஏற்படும் சங்கடங்கள் விலக பெற்று வெற்றி அடைந்திடுவோம்!

புகைப்படங்கள்

தகவல்கள் அறிய

அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்

திருமயிலை,  ராயப்பேட்டை நெடுஞ்சாலை,

சென்னை.

தொலைப்பேசி : +91 044 2499 6797