திருகோயில்

கால பைரவா் சன்னதி

பைரவா்  வழிப்பாடு

சிவாலயங்களில் காலபைரவா் சன்னதி பொதுவாக இருக்க கூடியது,  இங்கு இருக்க கூடிய சன்னதி தெற்கு நோக்கி மிகுந்த அழகுடன் நமக்கு கேட்கும் வரங்களை கொடுக்க வல்லவராக இருக்கின்றாா்.

ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பூஜை

நவக்கிரங்கள் இங்கு அக்னி மூலையில் உள்ளதால், அந்த சன்னதி எதிரே உள்ள இந்த பைரவா் குருவை பாா்பதும் குரு பகவான் பைரவரை பாா்பதும் போன்று அமையப் பெற்று இருக்கும்,  இவ்வாறு உள்ள அமைப்பு பெரும் பாலும் வேறு எங்கும் இல்லாத ஒரு அமைப்பு என்றே கூற வேண்டும்.

பகைவா் இல்லாத வாழக்கை எந்த ஜீவராசிகளுக்கும் இல்லை,  நன்மை என்றால் தீமை இருக்க தான் செய்கின்றது,  நம்முடைய மனதில் உள்ளே தோன்றுகின்ற தீய எண்ணங்களை  விலக்கி  சத்ருவாக விளங்ககூடிய மனதில் தோன்றும் எண்ணங்கள் விலக்கி நன்மை அடைய செய்கின்றாா்.

ஞாயிற்றுக்கிழமை களில் பைரவா் வழிபாடு நன்மை அளிக்கின்றது.  ஒவ்வொறு மாதமும் வரக்கூடிய அஷ்டமி திதியில் இங்கு சிறப்பு  பூஜைகள்  நடை பெருகின்றன.

இங்கு இரவு நேரத்தில் நடைபெரும் பைரவா் வழிபாடு ஒரு புதிய அனுபவமாக அமையும்.

வாருங்கள் நாமும் பைரவா் வழிபாடு செய்து,  நன்மை பெறுவோம்.!

புகைப்படங்கள்

தகவல்கள் அறிய

அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்

திருமயிலை,  ராயப்பேட்டை நெடுஞ்சாலை,

சென்னை.

தொலைப்பேசி : +91 044 2499 6797