தகவல்கள்

திருக்கோயில் வழிபாட்டு முறை

 வழிபாட்டிற்கு  செல்லும்விதம்

குளித்து, "சிவாய நம" என்று தீருநீறு அணிந்து உங்களாள் முடித்த அர்ச்சனைப்பொருள்களையும், தூபதீபத்திற்குரிய பொருள்களையும் எடுத்துக்கொண்டு கோயில்களுக்கு செல்லவேண்டும்.

மனம் வேறு எண்ணங்கள், வருத்தங்கள் ஆசைகள் இப்படி எதுவும் வந்து அடைந்து போகாமல் சுத்தமாக இருத்தல் வேண்டும்.

கோயில்களில் செய்ய கூடாதவைகள்:

  • கோயில்களுக்கு நீராடாமல் செல்வதோ, நீராடிய பின் ஈர ஆடையுடன் செல்வதோ கூடாது.
  • மூலஸ்தானத்தில் மூர்த்திக்கு அபிசேகம் நைவேத்தியம் முதலியவை நடக்கும்போது சுவாமிதரிசனம் செய்தல் வலம் வருதல் முதலியன தவிர்த்தல் வேண்டும்
  • கோயிலில் கிழக்கிலும், வடக்கிலும் கால்களை நீட்டி நமஸ்காரம் செய்வது கூடாது
  • நடந்து கொண்டும், கிடந்து கொண்டும் விபூதிதரித்தல் கூடாது
  • புகைத்தல், தாம்பூலம் அணிந்து செல்லல், செருப்பிணிந்து போதல், அசுத்தம் செய்தல், சிரித்து விளையாடல், வீண்மொழிபேசுதல், தூங்குதல் கூடாது
  • அன்னியர் யாவரேயாயினும் கோயிலுக்குள் வணங்குதல் கூடாது

ஜிவ சமாதியில் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள்

  • மனதை முழுமையாக மகானின் சன்னதியில் செலுத்த வேண்டும்
  • நான் என்ற அகம்காரம் மனதில் இல்லாமல், அடியாா்களுக்கு தொண்டு செய்ய வேண்டும்

 

புகைப்படங்கள்

தகவல்கள் அறிய

அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்

திருமயிலை,  ராயப்பேட்டை நெடுஞ்சாலை,

சென்னை.

தொலைப்பேசி : +91 044 2499 6797