புதன்கிழமை இரவு திருகோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நான்கு காலமும் நடைபெறும். பக்த மெய்யன்பர்கள் திரளாக கலந்துகொண்டு எல்லாம் வல்ல அருள்மிகு அப்பர் சுவாமிகள் ஆசிர்வாதமும் ஆருடப்பிரசாதம் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
மஹா சிவராத்திரி பூஜை நேரம்
முதல் காலம் - இரவு 10:00 மணிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் நடைப்பெறும்.
இரண்டாம் காலம் - இரவு 12:00 மணிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் நடைப்பெறும்.
மூன்றாம் காலம் - நள்ளிரவு 2:00 மணிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் நடைப்பெறும்.
நான்காம் காலம் - அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் நடைப்பெறும்.
சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது.
அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெரும் சிவராத்திரி விழாவில் பங்கேற்று சுவாமியை தரிசித்து அருள் பெறுவோமாக!
"ஆசான்முன் னேதுயில் மாண வகர்தமைத்
தேசாய் தண்டால் எழுப்பும் செயல்போல்
நேசாய் ஈசனும் நீடுஆண வத்தரை
ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே"
-- திருமூலர்.